Friday, February 26, 2016

சுட்டெரிக்குது சூரியன் வெப்பம் அதிகரிப்பு

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, தமிழகத்தின் பல மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்துஉள்ளது. இதனால், வரும், மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில், ௨௦௧௫ பிப்ரவரியில் அதிகளவாக, 94.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது; நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக நேற்று, 95 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. 

மதுரையில், கடந்த ஆண்டை ோலவே, நடப்பு பிப்ரவரியில் அதிகபட்சமாக, 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சேலத்தில், 2010க்கு பின், இந்த மாதம் அதிகபட்சமாக, 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. வேலுாரில், இம்மாதம் அதிகபட்சமாக, 98.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

இது குறித்து, சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ஒய்.ஏ.இ.ராஜ் கூறியதாவது:ஆண்டுதோறும், டிச., 23க்கு பின், பகல் பொழுது அதிகரிக்க துவங்கும். இதனால், குளிர் படிப்படியாக குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 

இக்காலகட்டத்தில், ஈரப்பதத்துடன் கூடிய கடல் காற்று, கிழக்கு நோக்கி வீசும். இந்த காற்று, கடலோர மாவட்டங்களில் மட்டுமே வெப்பத்தை குறைக்க உதவும்.கோவை, மதுரை, வேலுார், சேலம் போன்ற மாவட்டங்களில், காற்று வீசுவது மிக குறைவாக இருக்கும். எனவே, இப்பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024