Friday, February 26, 2016

பிசியோதெரபிஸ்ட் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க மனு செய்தவர்களுக்கு ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

மதுரை: இன்று நடைபெறும் பிசியோதெரபிஸ்ட் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க மனு செய்தவர்களுக்கு ஐகோர்ட் கிளை அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் கூரைக்குண்டுவைச் சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டாக்டர் எம்ஜிஆர்  மருத்துவப் பல்கலைக் கழகத்தின்கீழ் பிசியோதெரபி பாடத்தில் பட்டம் பெற்றுள்ளேன். 2009ல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், கிண்டி இயக்குநர்  அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். பல்நோக்கு மறுவாழ்வு உதவித் திட்டத்தின்கீழ் காலியாகவுள்ள பிசியோதெரபிஸ்ட் பணிக்கு  தகுதியுடையவர்களை பரிந்துரைக்குமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரிடம், மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் கேட்டுள்ளார். 

அதன்படி பிசியோதெரபி பிரிவில் டிப்ளமோ படிப்பை குறைந்தபட்ச தகுதியாகக் கொண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், டிப்ளமோ  படிப்பைவிட கூடுதல் தகுதியான பட்டம் பெற்றுள்ள நிலையில் அந்த பணிக்காக என்ைன பரிந்துரைக்கவில்லை. இதற்கிடையே பிப். 26ல் (இன்று)  இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற உள்ள நிலையில், அரசியல்  காரணங்களுக்காக நேர்முகத் தேர்வை துரிதகதியில் நடத்துகின்றனர். எனவே, நேர்முகத்தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடக் கூடாது. நேர்முகத் தேர்வில் என்னைப் பங்கேற்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் மல்லாங்கிணறு  வெற்றியன், விருதுநகர் கணேஷ்பாண்டியன் ஆகியோரும் மனு செய்திருந்தனர்.  மனுவை விசாரித்த நீதிபதி டி.புஷ்பா சத்யநாராயணா, இன்று நடக்கும்  நேர்முகத் தேர்வில் பங்கேற்க மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024