Tuesday, February 23, 2016

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில், பயணியொருவர் மது கேட்டு கலாட்டா செய்ததுடன் சிறுநீர் கழித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் 500 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

WEBDUNIA

இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில், பயணியொருவர் மது கேட்டு கலாட்டா செய்ததுடன் சிறுநீர் கழித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் 500 பவுண்டுகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

 
கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஜினு ஆப்ரஹாம் [39] தனது 10 வயது மகனுடன் ’ஏர் இந்தியா போயிங் 787’ ரக விமானத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்தின் பிர்மிங்காம் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். அப்போது அவர்
 
அப்போது அவர், விமானத்தில் அதிக அளவு மது கேட்டுப்பெற்று அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமானதும் விமான ஊழியர்களை அழைத்து தமக்கு மீண்டும் மது வேண்டும் எனக் கேட்டு நச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதற்கு விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, அவரை எச்சரித்துள்ளனர். விமானம் தரையிறங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு, அவர் விமாத்தின் மையப்பகுதிக்கு வந்து நின்றுகொண்டு தனது கால்சட்டை கழற்றி அங்கேயே சிறுநீர் கழித்துள்ளார்.
 
இச்சம்பவத்தினால் சக பயணிகள் அனைவரும் முகம் சுழித்துள்ளனர், தொடர்ந்து விமான ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவரை இருக்கையில் வைத்து பிணைத்துக் கட்டியுள்ளனர். பர்மிங்காம் விமான நிலையம் சேர்ந்ததும் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
 
அவரின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, பர்மிங்காம் குற்றவியல் நீதிமன்றம் 500 பவுண்டுகள் விமான நிறுவனத்திற்கு இழப்பீடாகவும், கூடுதல் கட்டணமாக 30 பவுண்டுகளும், செல்வீன தொகையாக 185 பவுண்டுகளும் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
 
இவரது மருந்து மாத்திரைகளை இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனைவியின் உடல்நலம் குறித்து கவலையினால், ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024