Friday, February 26, 2016

ஸ்மிருதியின் ஆவேச பேச்சு' டுவிட்டரில்' மோடி பாராட்டு



எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டு ஆவேசமாக பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பாராட்டி, சமூக வலைதளமான டுவிட்டரில், பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து உள்ளார்.





டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் கைது மற்றும் ஐதராபாத் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம் குறித்து, லோக்சபாவில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது.

அப்போது பேசிய,அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'மாணவர்களை வைத்து, காங்., உள்ளிட்ட கட்சிகள், அரசியல் செய்கின்றன. கல்வி, காவிமயமாவதை நிரூபித்தால், பதவி விலகத் தயார்' என, ஆவேசமாக பேசினார்.

அடுக்காடுக்கான ஆதாரங்களையும், ஆவணங் களையும் எடுத்துக் காட்டி அவர் பேசியது, எதிர்க்கட்சியினருக்குகலக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், ஸ்மிருதியின் பேச்சுக்கு, பா.ஜ.,வினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியும், ஸ்மிருதியின் பேச்சை பாராட்டி, 'டுவிட்'

செய்துள்ளார். ஸ்மிருதி இரானியின் பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்,
'சத்யமேவ ஜெயதே. இதை, நாட்டு மக்கள் முழுமையாக கேட்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024