Sunday, June 18, 2017

கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகுமா?

பதிவு செய்த நாள்17ஜூன்2017 20:06

இன்ஜி., கல்லுாரிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடாமல், அண்ணா பல்கலை தாமதம் செய்துள்ளது.

இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், கவுன்சிலிங் தாமதத்தாலும், விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா என்ற சந்தேகம் காரணமாகவும், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களால், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம், இந்த ஆண்டு, இன்னும் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடவில்லை. இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், பல்கலை தேர்வுத் துறையும் இணைந்து, இந்த பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால், பல்கலை தரப்பில் கால தாமதம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது. அதனால், சரியான கல்லுாரிகளை தேர்வு செய்ய முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024