Saturday, June 17, 2017

ஜூன் 19க்குள் மாணவர் சேர்க்கை: கோர்ட் உத்தரவு
பதிவு செய்த நாள்17ஜூன்2017 03:42

சென்னை: புதுச்சேரியில், மருத்துவ கவுன்சிலிங்கில் வெற்றி பெற்ற மாணவர்களை, வரும், 19ம் தேதிக்குள் சேர்க்கும்படி, நிகர்நிலை பல்கலைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் மேனன் தாக்கல் செய்த மனு: புதுச்சேரியில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின்படியான இடங்களுக்கு, 5.50 லட்சம் ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 14 லட்சம் ரூபாய் என, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகர்நிலை மருத்துவ பல்கலைகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
நிகர்நிலை பல்கலைகளில், ஆண்டுக்கு, 40 முதல், 50 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, நிகர்நிலை பல்கலைகளில், முறையான கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
நிகர்நிலை பல்கலைகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கவுன்சிலிங்கின் போது, கட்டண விபரங்களை தெரிவிப்பதில்லை எனவும் கூறப்பட்டது. எனவே, நிகர்நிலை பல்கலைகளில் கட்டணம் நிர்ணயிக்க, ஒரு குழுவை பல்கலை மானியக் குழு அமைக்க வேண்டும் என, நாங்கள் கருதுகிறோம். நிகர்நிலை பல்கலைகளில், அதிக கட்டணம் இருப்பதாக, புதுச்சேரி அரசும், துணைநிலை கவர்னரின் செயலரும் தாக்கல் செய்த மனுக்களில் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கு தேர்வான, கவுன்சிலிங்கில் வெற்றி பெற்ற மாணவர்களை, நிகர்நிலை பல்கலைகளில் சேர்க்க வேண்டும்.
அவர்கள், ஆண்டு கட்டணமாக, முதலாம் ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாயை, 'சென்டாக்' எனப்படும், மத்திய சேர்க்கை குழுவிடம், 'டிபாசிட்' செய்ய வேண்டும். கட்டண நிர்ணய குழு, அதிக கட்டணம் நிர்ணயித்தால், வித்தியாச தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும். 

ஏற்கனவே, நிகர்நிலை பல்கலைகளில் சேர்ந்த மாணவர்களும், கட்டண நிர்ணய குழுவின் முடிவுக்கு பின், வித்தியாச தொகையை திரும்ப பெறலாம்.
மாணவர்கள் சேர்க்கையை, வரும், 19ம் தேதி, மாலை, 5:௦௦ மணிக்குள் முடிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவின்படியான மாணவர்கள் சேர்க்கை, வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது.

எனவே, மாணவர்களின் எதிர்காலம் கருதி, மத்திய அரசும், பல்கலை மானிய குழுவும், உடனடியாக கட்டண நிர்ணய குழுவை ஏற்படுத்த வேண்டும். கட்டண குழுவின் முடிவு, வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. விசாரணை, ஜூலை, 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது. 

இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...