Wednesday, June 21, 2017

திருமலைக்கு நடந்து வந்தால் விரைவில் சாமி தரிசனம் செய்யலாம் என பக்தர்கள் நினைக்க வேண்டாம்
திருமலைக்கு நடந்து வந்தால் விரைவில் சாமி தரிசனம் செய்யலாம் என பக்தர்கள் நினைக்க வேண்டாம்

ஜூன் 20, 2017, 02:45 AM

திருமலை

திருமலைக்கு நடந்து வந்தால், விரைவில் சாமி தரிசனம் செய்யலாம் எனப் பக்தர்கள் நினைக்க வேண்டாம். தரிசனத்துக்காக பக்தர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நிருபர்களிடம் கூறியதாவது:–பக்தர்கள் அலைமோதல்

திருப்பதி அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வருகின்றனர். நடந்து வந்தால், விரைவில் சாமி தரிசனம் செய்து விடலாம் எனப் பக்தர்கள் பலர் நினைக்கின்றனர். திருமலையில், கோடையையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், நடந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 12 மணியில் இருந்து 14 மணிநேரம் வரை காத்திருக்கின்றனர்.

கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் 4 மணியில் இருந்து 5 மணி நேரத்தில் திவ்ய தரிசன பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். கடந்த சனிக்கிழமை இரு மலைப்பாதைகளில் மொத்தம் 45 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை முடிந்தும், தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அருள் கிடைக்கும்

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு உத்தரவுபடி, கடந்த 3 மாதங்களாக வி.ஐ.பி.டிக்கெட் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறைக்கப்பட்டு, சாதாரண பக்தர்களுக்கு தரிசன நேரம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நடந்து வந்தால், விரைவில் சாமி தரிசனம் செய்யலாம் எனப் பக்தர்கள் நினைக்க வேண்டாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களும், இலவச தரிசன பக்தர்களும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும், சாமி தரிசனத்துக்காக திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்கும் பக்தர்களுக்கே ஏழுமலையான் அருள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024