Wednesday, June 21, 2017

நீட் தேர்வு முடிவு வெளியாவது எப்போது?



இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர நீட் என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த மே மாதம் 7–ந் தேதி நடைபெற்றது.

ஜூன் 21, 2017, 03:45 AM

சென்னை,

11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்தும், வருகிற 26–ந் தேதிக்குள் தேர்வு முடிவை வெளியிடலாம் என்றும் கடந்த 12–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே தேர்வு முடிவு நேற்று வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் நீட் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்படவில்லை. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரி ஒருவர் கூறுகையில் நீட் தேர்வு முடிவு வெளியிடும் தேதி விரைவில் வெளியிடப்படும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024