Wednesday, June 21, 2017

பார்வையற்ற ஆயுள் கைதி விடுதலை மருத்துவக்குழு பரிந்துரை
பதிவு செய்த நாள்21ஜூன்
2017
01:55

மதுரை: இரு விழிகளிலும் பார்வையிழந்த, ஆயுள் தண்டனை கைதி, மருத்துவக் குழு பரிந்துரையின்படி விடுதலை செய்யப்பட்டார். துாத்துக்குடியை சேர்ந்தவர் ஜவஹர். கொலை வழக்கில் இவருக்கு துாத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனையை ஏழாண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வந்தார்.

சிறையில் தைராய்டு உட்பட சில நோய்களால் அவதியுற்றவருக்கு, கண் பார்வை பாதிக்கப்பட்டது. இரு விழிகளிலும் பார்வையிழப்பு ஏற்பட்டதால் கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு செய்தார்.

அம்மனு மருத்துவக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மனு மீது விசாரணை நடத்தி, ஜவஹரை பரிசோதனை செய்தனர். இரு விழிகளிலும் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளதால் விடுவிக்கலாம் என டி.ஐ.ஜி., கனகராஜ், கண்காணிப்பாளர் ஊர்மிளாவிற்கு பரிந்துரை செய்தனர். அதையடுத்து கருணை அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

'அட்டாக்' பாண்டி மனு: மதுரை தி.மு.க., செயற்குழு உறுப்பினர் 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய, வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் 'அட்டாக்' பாண்டி, உடல் நலக்குறைவால் அவதியுறுவதால் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரி அவரது குடும்பத்தினர், சிறை கண்காணிப்பாளருக்கு மனு செய்தனர். அவர் விசாரணை கைதி என்பதால் மனுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்ப கண்காணிப்பாளர்
உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024