Wednesday, June 21, 2017

மருத்துவ கவுன்சிலுக்கு நிர்வாகி தீர்ப்பை தள்ளி வைத்தது ஐகோர்ட்
பதிவு செய்த நாள்20ஜூன்2017 23:39

சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் ஜூன் 19ல் முடிந்தது. மருத்துவ கவுன்சிலுக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை, நிர்வாகியாக நியமிக்கக் கோரி, கவுன்சிலின் பொறுப்பு தலைவராக உள்ள, டாக்டர் சடகோபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், ''நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது; கவுன்சில் உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாததால், அமைதியாக தேர்தல் நடத்த முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அமையும் வரை, மருத்துவ கவுன்சிலுக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும்,'' என்றார்.

இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி துரைசாமி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...