Monday, October 9, 2017

இந்திய - சர்வதேச அறிவியல் விழா சென்னையில் 13ம் தேதி துவக்கம்
பதிவு செய்த நாள்08அக்
2017
22:25

சென்னை:''இந்திய - சர்வதேச அறிவியல் விழா, சென்னையில், 13ல் துவங்கி, நான்கு நாட்கள் நடக்கிறது. ''பப்பாளி பழத்தில் இருந்து, டி.என்.ஏ., பிரித்தெடுக்கும் முயற்சியில், ௧,௦௦௦ மாணவர்கள் பங்கேற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர்,'' என, மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சர், ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை

சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:இந்திய - சர்வதேச அறிவியல் விழா, சென்னையில், வரும், 13 முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. சென்னை, அண்ணா பல்கலை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகிய, ஐந்து இடங்களில் இந்த விழா நடக்கிறது.

பப்பாளி பழத்தில் இருந்து, டி.என்.ஏ.,வை பிரித்தெடுப்பதில், 1,000மாணவர்கள் பங்கேற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். இது போன்று, 15 துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 

புதிய படைப்புகள்மத்திய அரசின் சுற்றுச் சூழல் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும், விவரிக்கப்பட உள்ளன.தொழில்நுட்ப ரீதியான பல்வேறு பிரச்னைகளுக்கு, அறிவியல் முறையில் தீர்வு காணவும், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து, புதிய படைப்புகளை உருவாக்கவும், இந்த விழா வழி வகுக்கும். இதில், நாட்டின் சிறந்த நிறுவனங்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்பர்.இவ்வாறு ஹர்ஷ வர்த்தன் கூறினார்.

'டெங்கு தடுக்க புதிய மருந்து?'

அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறுகையில், ''உலக தரத்திற்கேற்ப, அறிவியல் தொழில்நுட்ப துறையில், நம்நாடு மேம்பட்டு வருகிறது. இந்திய விஞ்ஞானிகள், பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, மக்களை அச்சுறுத்தும் நோய்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், நல்ல முடிவு கிடைக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024