Wednesday, January 3, 2018

சிங்கப்பூர் விபத்தில் பலி: தவிக்கும் தமிழர் குடும்பம்

Added : ஜன 03, 2018 05:05

சிங்கப்பூர்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், செல்வம் வீரய்யா, 33; சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். 2017 டிச., 22ல் நடந்த சாலை விபத்தில், அவர் உயிரிழந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த, இந்தியர்கள் நலனுக்காக போராடும் தன்னார்வ அமைப்பு, 1.25 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து, அவருடைய குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தது. ஏழு ஆண்டுகளாக, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த செல்வத்தின் வருமானத்தையே, அவருடைய தந்தை, தாய், மனைவி, இரு சகோதரிகள் கொண்ட குடும்பம் நம்பி இருந்தது. இந்நிலையில், சாலை விபத்தில் இறந்த செல்வத்துக்கு, விபத்து இழப்பீடு அளிப்பது குறித்து, சிங்கப்பூரின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆய்வு செய்கிறது. அதன்படி, அவருடைய குடும்பத்துக்கு, 33 லட்சம் - 98 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...