Monday, June 1, 2015

பதிலளிக்காதவர்களுக்குரூ.2 லட்சம் அபராதம்!

வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காத வருமான வரி செலுத்து வோருக்கு, அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையிலான சட்டம், அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
சமீபத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ள, கறுப்பு பணம் (வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் பதுக்கல்) தடுப்பு சட்டம் மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015ன் படி, இந்த புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரித்துறை, இ - மெயில், 'பேக்ஸ்' அல்லது 'சம்மன்' மூலம், நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீசுக்கு, பதிலளிக்க தவறுபவர்களுக்கு, குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, இந்த புதிய சட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய சட்ட மசோதா, லோக்சபாவில், மே 13ல், ராஜ்யசபாவிலும், அடுத்த நாள் லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 26ல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து சட்டமாகியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024