Monday, June 1, 2015

மின் கட்டண கூடுதல் வைப்பு தொகை:20 லட்சம் பேரிடம் ரூ.50 கோடி வசூல்

மின் வாரியம், 20 லட்சம் பேரிடம், 50 கோடி ரூபாய் அளவிற்கு, கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூல் செய்துஉள்ளது.


தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, வணிகம், தொழிற்சாலை என, மொத்தம், 2.60 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். புதிய மின் இணைப்பு பெறும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, ஒரு முனை, 200 ரூபாய்; மும்முனை, 600 ரூபாய் என, காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாட்டை பொறுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, காப்பு வைப்புத் தொகையில் மாற்றம் செய்ய வேண்டும். அதன்படி, மின் இணைப்பு பெறும் போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, மின் பயன்பாடு அதிகரித்திருந்தால், கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால், வைப்புத் தொகை, வசூல் செய்யப்படுவதில்லை.

மின் வாரிய அதிகாரிகள், 2015-16க்கு, கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியை, கடந்த ஏப்ரலில் துவக்கினர். மொத்தம் உள்ள, 2.60 கோடி மின் நுகர்வோரில், 45 லட்சம் பேர் மட்டும், கூடுதல் வைப்புத் தொகை செலுத்த தகுதியானவர்கள். கடந்த, 29ம் தேதி வரை, 20 லட்சம் மின் நுகர்வோரிடம், 50 கோடி ரூபாய் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.




இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீடுகளில், மின் பயன்பாடு எடுக்கும் போது, மின் கட்டண தொகை; கூடுதல் வைப்பு தொகையை, தனித்தனியாக எழுத வேண்டும். இதில், வைப்புத் தொகையை, மூன்று தவணையில் செலுத்தலாம். இதற்கு, மின் வாரியம் சார்பில், 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. வைப்புத் தொகை வசூலிப்பதில், குழப்பம், பிரச்னை ஏற்படாமல் இருக்க, பிரிவு அலுவலகங்களில், செயற் பொறியாளர்கள், தொடர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024