Monday, June 1, 2015

டிரைவரை ஏமாற்றிய பெண்ணுக்கு48 கி.மீ., நடைபயண தண்டனை

சிகாகோ:அமெரிக்காவில், வாடகை டாக்சிக்கு பணம் கொடுக்காமல் ஓட்டுனரை ஏமாற்றிய பெண்ணுக்கு, 48 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதியின் தீர்ப்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின், லேக் கவுண்டியைச் சேர்ந்த பெண், விக்டோரியா பாஸ்கம். இவர், க்லெவெலான்டிலிருந்து பெய்ன்ஸ்வெல்லே வரை, 48 கி.மீ., துாரம், வாடகை டாக்சியில் பயணம் செய்தார்.


பெய்ன்ஸ்வெல்லே வந்தவுடன் காரிலிருந்து இறங்கிய விக்டோரியா, காருக்கான வாடகை பணத்தை ஓட்டுனரிடம் கொடுக்க மறுத்தார். பணத்தை கொடுக்காமலேயே, அங்கிருந்து சென்றுவிட்டார். அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், விக்டோரியா மீது புகார் செய்தார். விக்டோரியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வழக்கை விசாரித்த நீதிபதி, மைக்கேல் சிக்கோனெட்டி, 48 கி.மீ., துாரம் வாடகை டாக்சியில் பயணித்து, பணம் கொடுக்காமல் ஓட்டுனரை ஏமாற்றிய விக்டோரியா, 48 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.




தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், சம்பந்தப்பட்ட வாடகை டாக்சி நிறுவனத்திடம், 6,000 ரூபாய் தொகையை, விக்டோரியா செலுத்த வேண்டும் எனவும் கூறினார். ஏமாற்றி பயணித்த துாரத்தை நடந்தே செல்ல வேண்டும் என்ற வினோத தீர்ப்பு, அந்நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024