பெங்களூரு,
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் மட்டுமின்றி தமிழக எதிர்க்கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை மற்றும் மந்திரிகள் சிலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக அரசு சட்டத்துறையின் ஆலோசனையை கேட்டுள்ளது. சட்டத்துறை அதிகாரிகள் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் 3, 4 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நேற்று முன்தினம் கூறினார்.
மந்திரிசபை கூட்டம்
இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment