Tuesday, June 2, 2015

விளம்பரம் செய்த கல்வி நிறுவனத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: ராதிகா தடாலடி



ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றும் நடிகை ராதிகா, அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில்ரீதியானது மட்டுமே, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ராதிகா தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சமூக தளங்களில் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் புகைப்படங்கள் மற்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிலர் அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றெல்லாம் தகவல் பரப்பினர்.

இதையடுத்து, ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024