துபாய்: இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் அரபு நாட்டு நிறுவனங்கள், அவர்களின் விவரங்களை, தங்கள் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என, அந்நாட்டிலுள்ள இந்திய துாதரகம், உத்தரவிட்டுள்ளது.கடந்த வாரம், இந்தியத் துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய குடிமக்களை வேலைக்கு எடுக்கும் அரபு நிறுவனங்கள், அவர்களின் விவரங்களை, அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.50 லிருந்து 150 வரை ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள், ஜூன் 30க்கு முன்னரும்; 20லிருந்து 50 வரை ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள், ஜூலை 31க்கு முன்னரும்; 20க்கும் குறைவான ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள், ஆகஸ்ட் 31க்குள்ளும் பதிவு செய்ய வேண்டும். 150க்கும் மேல் ஆட்களை எடுக்கும்போது உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.ஊழியர் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும்போது, நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக குறிப்பிட வேண்டும்.இது, அரபு நாடுகளில் வேலைக்கு சேரும் இந்தியர்களின் விவரங்களை எளிதாக அறியவும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கவும் உதவியாக இருக்கும் என, கூறப்படுகிறது
No comments:
Post a Comment