Wednesday, June 3, 2015

நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு: அரசு உத்தரவு

தமிழகத்தில் தனியார் நர்சிங் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க, சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நர்சிங் கல்லுாரி, நான்கு ஏக்கரில் அமைந்து இருக்க வேண்டும்; 4,000 சதுர அடியில் கட்டடங்கள் அமைந்து இருக்க வேண்டும்; 2,000 சதுரடி கட்டடத்தில், 20 மாணவியர் படிக்க வேண்டும். விடுதியில், ஓர் அறையில், இரண்டு மாணவியர் தங்கியிருக்க வேண்டும்; ஆறு மாணவியருக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். போதுமான வகுப்பாசிரியர்கள் இருக்க வேண்டும். இவர்கள் எம்.எஸ்சி., - பி.எஸ்சி., நர்சிங் படித்து போதுமான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


நுாலகத்தில் படிக்கும் வசதியுடன், அனைத்து புத்தகங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதங்கள் குறித்தும் ஆய்வு செய்து விவரங்களை பெற வேண்டும். கல்லுாரியில் இருந்து பஸ் போக்குவரத்து வசதி உள்ளதா என்பதை ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை உடனே அளிக்க வேண்டும், என, அரசு உத்தரவிட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில், தரமற்ற நர்சிங் கல்லுாரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024