மும்பை: பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கு, வரும் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெளிக்கொணர்வதற்கும், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற, கடந்த ஆண்டு ஜனவரியில், ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்படவில்லை. அதன்பின், அச்சிடப்பட்ட நோட்டுகளின் பின்புறம், கீழ் பகுதியில் சிறிய அளவில் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 30ம் தேதி வரை, வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கு உள்ள வங்கிக் கிளையில், பழைய 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அளித்து மாற்றிக் கொள்ளலாம். 10க்கும் மேற்பட்ட, 500 அல்லது 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது, வங்கிக் கணக்குடன், குடியிருப்பு மற்றும் அடையாள சான்றை அளிக்க வேண்டும்.
ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நோட்டு களை மாற்றும் போது பான் எண்ணை குறிப்பிட வேண்டும். பழைய நோட்டுகளுக்கான பணம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.அதன்பின், இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் கணக்கு வைத்திருப்பதுடன், அடையாள மற்றும் குடியிருப்பு சான்றுகளை வழங்க வேண்டும்.
வரும் 30ம் தேதிக்கு பின், வங்கி அல்லது ஏ.டி.எம்., மையங்களில் பழைய நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இவ்வாறு சேகரிக்கப்படும் பழைய நோட்டுகள், இறுதி தேதிக்கு பின், ரிசர்வ் வங்கியால் அழிக்கப்படும். இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிரைவரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment