Monday, October 9, 2017

குழந்தையை காப்பாற்ற பணமின்றி பரிதவிக்கும் சேலம் பெண் போலீஸ்

பதிவு செய்த நாள்  09அக்
2017
00:25




சேலம்:குடிகார கணவரின்ஆதரவு இல்லாத பெண் காவலர், மகனை காப்பாற்ற பணமின்றி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், சித்தனுாரைச் சேர்ந்தவர் சுதா, 30; மாநகர ஆயுதப்படை பெண் காவலர். கணவர் ரமேஷ், 33, ஜவுளி கடையில் பணிபுரிகிறார். 8 வயதில் மகள், சஞ்சய், 6, என்ற மகன் உள்ளனர். மது பழக்கம் உடைய ரமேஷ், குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. சுதா சம்பளத்தில், குடும்பம் ஓடியது.

மஞ்சள் காமாலை

ஜூலை மாதம், டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுதா, தற்போது தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். அடுத்து, இவரது மகன் சஞ்சய், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டான். 6ம் தேதி, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மஞ்சள் காமாலை கிருமி யின் தாக்கம், 16 புள்ளிகளாக உயர்ந்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதன் தாக்கம், மூளையை பாதித்து, சிறுவன் சுயநினைவை இழந்துள்ளான் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

செயற்கை சுவாசம் அளிக்க, 35 ஆயிரம் ரூபாய், அவசர சிகிச்சை பிரிவில், 15 ஆயிரம், மருந்து, மாத்திரைகளுக்கு, 30 ஆயிரம் என, தினமும் சராசரியாக, 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.சுதாவுக்கு வழங்கப்பட்டுள்ள, காவலர் இன்சூரன்சில், 'அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பணம் வழங்க முடியும்' என, இன்சூரன்ஸ் நிறுவனம் கைவிரித்து விட்டது.

கடந்த மூன்று நாட்களாக, சஞ்சய்க்கு அளித்த சிகிச்சைக்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள சுதா, தன், 4 சவரன் தங்க சங்கிலியை விற்று விட்டார்.சக போலீசார் பலரிடம் கடன் வாங்கி, மகனை காப்பாற்ற போராடி வருகிறார். வரும் நாட்களில், மருந்து, மாத்திரை கூட வாங்க முடியாத நிலையில் உள்ளார்.

மருத்துவ விடுப்பு

அவரது மூன்று மாத மருத்துவ விடுப்பு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. நாளை, அவர் பணியில் இணைய வேண்டும். உதவ நினைப்பவர்கள், 94981 - 66461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.''என் கணவர் உதவ மறுத்து விட்டார். முதல்வர் பழனிசாமி, போலீஸ் உயர் அதிகாரிகள் தான், என் குழந்தையை காப்பாற்ற வேண்டும்,'' என, சுதாகண்ணீர் மல்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024