Sunday, October 15, 2017


போராட்ட நாளை ஈடுசெய்ய தீபாவளியன்றும் பணியாற்ற வேண்டும்


திண்டுக்கல், ஜாக்டோ -ஜியோ நடத்திய ஏழு போராட்ட நாட்களை ஈடு செய்ய, தீபாவளி பண்டிகை நாளை வேலை நாட்களாக அறிவித்தது ஆசிரியர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர் கூட்டமைப்பானஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7ம் தேதி முதல் செப்.15ம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவினை தொடர்ந்து போராட்டம் முடிவிற்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 'நோ ஒர்க், நோ பே' என அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் வேலைநிறுத்த நாட்களை ஈடுசெய்யும் வகையில், சனி மற்றும் விடுமுறை நாட்களில் 7 நாட்கள் பணி செய்ய அரசு அறிவுறுத்தியது. இதை
யடுத்து அக்.14, 18, 21, 28, நவ.4, 11 மற்றும் நவ.18 வேலை நாட்களாக நடைமுறைப்படுத்தப்படும் என, அக்.9ம் தேதி அரசு இணைச்செயலாளர் வேதரத்தினம் பிறப்பித்துள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: 
அக்.18ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டம் நடைபெறும் நேரத்தில், பள்ளியை நடத்த 
உத்தரவிடப்பட்டுள்ளது. 
அன்றைய தினம் 
ஆசிரியர்கள் பணிக்குச் சென்றாலும், மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
இதைக் கூட கவனிக்காமல் வேலைநாளாக 
அறிவித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது என்றனர்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...