'தினமலர்' செய்தி எதிரொலி : கல்லூரியில் சேர்ந்த மாணவி
பதிவு செய்த நாள்
20அக்2017
02:31
பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் பத்மப்ரியா, 17. பிளஸ் 2 தேர்வில், 1,114 மதிப்பெண் பெற்று, 'நீட்' தேர்வில், 77 மதிப்பெண்கள் எடுத்தார். இதனால், சித்தா படிப்புக்கு விண்ணப்பித்தார்.
கவுன்சிலிங்கில், கோவையில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஏழ்மை காரணமாக, கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இது குறித்து, நமது நாளிதழில், 17ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது.
தினமலர் வாசகர்கள் பலர், மாணவியின் படிப்புக்கு உதவுவதாக உறுதி அளித்ததுடன், அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வங்கி கணக்கில், பணம் செலுத்தினர். சிலர் நேரில் சென்றும் உதவி செய்தனர். இதையடுத்து, 65 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய பத்மப்ரியா நேற்று, கோவை, ஆர்.வி.எஸ்., தனியார் சித்த மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தார்.

No comments:
Post a Comment