Friday, October 20, 2017

மெர்சல் படத்துக்கு பெங்களூரில் எதிர்ப்பு


பெங்களூரு: நடிகர் விஜய் நடித்த, மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த, பெங்களூரின் பல தியேட்டர்களில், அவரது பேனர்கள், கட் அவுட்கள் அகற்றப்பட்டன. 
கன்னட அமைப்பினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மோதல் அபாயம் நிலவுகிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில், 43 தியேட்டர்களில், விஜய் நடித்த, மெர்சல் திரைப்படம், திரையிடப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணா தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விஜய், கட் அவுட்கள், பேனர்கள், நேற்று முன்தினம் கிழிக்கப்பட்டன. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், போராட்டம் நடத்தினர்; போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, நகரின் பல திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் அகற்றப்பட்டன. நேற்று, மல்லேஸ்வரம் சம்பிகே திரையரங்கில், ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கு இடையே, மோதல் ஏற்பட்டதாகவும், கன்னடர்கள் தாக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இதையறிந்த, கன்னட அமைப்பை சேர்ந்த சிவராமே கவுடா, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்த், பிரவீன் ஷெட்டி உட்பட பலர், சம்பிகே திரையரங்கு முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய், கட் - அவுட்டுகள், பேனர்களை கிழித்தனர். இதையடுத்து, திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024