'மெர்சல்' ஆன்லைன் டிக்கெட் : அனுமதி மறுப்பால் ஆவேசம்
பதிவு செய்த நாள்
20அக்2017
02:19
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், மெர்சல் படம் வெளியாகியுள்ள தியேட்டரில், 'ஆன்லைன்' டிக்கெட் வாங்கியவர்களை அனுமதிக்காததால், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஜய் நடித்த மெர்சல் படம், நேற்று முன்தினம், 'ரிலீஸ்' ஆனது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மூன்று தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. வாசு தியேட்டரில் நேற்று காலை, படம் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர்.
'நியூ டாட்காம்' என்ற இணையதளம் மூலம், ஆன்லைனில் டிக்கெட் பெற்றவர்களுக்கு, தியேட்டர் நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. தொடர்ந்து, ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இருந்தும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க, தியேட்டர் நிர்வாகம் மோசடி செய்வதாக, ரசிகர்கள் புகார் கூறினர். இதனால், தியேட்டர் நிர்வாகம், ஆன்லைனில் டிக்கெட் பெற்ற, சிலரை மட்டும் அனுமதித்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், படம் திரையிடப்பட்டது.

No comments:
Post a Comment