Sunday, October 15, 2017

தேசிய செய்திகள்

20 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி தகவல்



உலக அளவிலான கல்வித் தரத்தை உறுதிப்படுத்த இந்தியாவின் 20 பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அக்டோபர் 15, 2017, 05:15 AM

பாட்னா,

பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யவைத்து அறிவை திணிப்பது போன்ற பழமையான கல்வி பயிற்றுவிக்கும் முறைகளை கைவிடவேண்டும். தற்காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கற்றல் மற்றும் புதுமைகளை உருவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அப்போதுதான் மாணவர்களின் அறிவாற்றல் வெளிப்படும்.

ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் இருந்து விடுவிக்க எனது அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக உயர் கல்வியில் நமது பல்கலைக்கழகங்கள் உலக நாடுகளுடன் போட்டியிட்டு தரவரிசையில் முதல் 500 இடங்களுக்கு இருப்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக மத்திய அரசு 20 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யும். இந்த தொகையை அந்த 20 பல்கலைக்கழகங்களும் பயன்படுத்தி உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் என்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்திய மாணவர்களை உருவாக்கிடவேண்டும்.

இந்த பல்கலைக்கழகங்கள் பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரால் தேர்வு செய்யப்படமாட்டார்கள். அவற்றின் திறமையான செயல்பாடுகள் மூன்றாவது முகமையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதி உதவி அளிக்கப்படும். பாட்னா பல்கலைக்கழகமும் இந்த அரிய வாய்ப்பினை பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும்.


ஒரு காலத்தில் இந்தியா என்றால் பாம்பாட்டிகள், பேய் ஓட்டுபவர்கள், மூடநம்பிக்கை கொண்டவர்களின் நாடு என்று உலக நாடுகளால் கூறப்பட்டது. இப்போதோ இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையால் இந்தியாவை பற்றிய உலக நாடுகளின் பார்வை மாறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் பங்கேற்றார். பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வரான பிறகு பீகாரில் மோடியும், நிதிஷ்குமாரும் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி இதுதான். மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பஸ்வான், அஸ்வினி சவுபே, உபேந்திர குஷ்வாஹா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நேற்று காலை பாட்னா வந்த பிரதமர் மோடியை பாட்னா விமான நிலையத்தில் நிதிஷ்குமார் வரவேற்றார்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...