Thursday, October 12, 2017


பாஸ்வேர்டுக்கு ஆதார் ஆப்சில் புதிய வசதி


2017-10-12@ 02:02:38




அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே அடையாளமாக ஆதாரை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. வங்கி கணக்கு, வரி கணக்கு தாக்கல், ரயில் டிக்கெட் சலுகை, அரசு மானியங்கள் என பலவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எம்ஆதார் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்து, இவற்றை ரயில் பயணத்தின்போது அடையாள சான்றாக காண்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

ஆதார் மொபைல் ஆப்ஸ் தற்போது 10 லட்சம் பதிவிறக்கங்களை தாண்டியுள்ளது. இனி ஆதாருக்கான ஒரு முறை பாஸ்வேர்டை இந்த ஆப்ஸ் மூலமாகவே பெறும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. டைனமிக் பாஸ்வேர்டு எனப்படும் இந்த புதிய வசதி, மொபைல் நெட்வொர்க் சரியாக இல்லாத பகுதிகளில் உள்ளவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...