Thursday, October 12, 2017




2022 ல் குண்டு குழந்தைகளே அதிகம் இருப்பார்கள்

 குழந்தைகள்,children, ஆய்வு அறிக்கை, Research report, மும்பை, Mumbai, ஊட்டச்சத்து குறைபாடு ,  Nutrition deficiency,உலக சுகாதார மையம்,  World Health Center,லண்டன் இம்ரியல் கல்லுாரி, London Immigration stone, இந்தியா, India, குண்டு குழந்தைகள், fat children
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
2022ல் குண்டான குழந்தைகள்: ஆய்வில் தகவல்
மும்பை : உலக அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை விட குண்டான குழந்தைகளின் எண்ணிக்கையே அதிக அளவில் இருக்கும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல் :

உலக சுகாதார மையமும், லண்டன் இம்ரியல் கல்லுாரியும் இணைந்து நடத்திய மருத்துவ ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, உலக அளவில் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. 2016 ம் ஆண்டு வரை இந்தியாவிலும், உலக அளவிலும் 97 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர். 
ஆனால் சமீப காலமாக இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது. 1975 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலக அளவிலும் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

குண்டு குழந்தைகள் அதிகம் :

கடந்த, 2016 ல் இந்தியாவில் குண்டான ஆண் குழந்தைகளின் விகிதம் 15.03 முதல் 16.97 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 15.74 முதல் 16.94 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட், பீகார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மிகப் பெரிய சவாலாக உள்ளது. கிராமப்புற குழந்தைகளை விட நகர்புறக் குழந்தைகளே உடல்எடை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
துரித உணவுகளே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 40 ஆண்டுகளில் குழந்தைகளின் உடல் எடை அதிகரித்து வருகிறது. துரித உணவு கலாச்சார 2000 ம் ஆண்டிற்கு பிறகு அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் உலக அளவில் 2022 ம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் எடை குறைந்த குழந்தைகளை விட உடல்எடை அதிகம் கொண்ட குழந்தைகளே அதிக அளவில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024