Tuesday, October 17, 2017

21 மாத நிலுவை தொகை முழுமையாக வழங்க கோரிக்கை

மதுரை: ''அரசு ஊழியர்களுக்கு, 21 மாத சம்பளக்குழு நிலுவைத் தொகையை முழுவதுமாக வழங்க, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.

சங்க மாநில தலைவர் செல்வராஜ், மதுரையில் நேற்று அளித்த பேட்டி: சம்பளக்குழு முடிவுகள், 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மத்திய அரசு, ஏழாவது சம்பளக் குழுவில் குறைந்த பட்சம், 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு, 15 ஆயிரத்து, 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது, ஏமாற்றம் அளிக்கிறது. குறைந்த பட்சம், 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில், ஒரு கோடி பேர், வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர். அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. 
இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து, ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 2016 ஜன., 1ம் தேதி முதல், சம்பள மாற்றப் பயனை அனுபவித்து வரும் நிலையில், தமிழக அரசு, 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.அதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தர விட வேண்டும். இதுகுறித்து சென்னையில், 21ம் தேதி அரசு பணியாளர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...