Sunday, October 15, 2017


வெளிநாடுகளுக்கு கடிதம், பார்சல் அனுப்ப 4 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள்


By DIN  |   Published on : 15th October 2017 04:13 AM 
வெளிநாடுகளுக்குப் புத்தகம், பதிவுத் தபால், பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்புவதற்காக 4 இடங்களில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு வட்டத் தலைமை தபால் துறைத் தலைவர் எம்.சம்பத் தெரிவித்தார்.
தி.நகரில் சிறப்பு கவுன்ட்டர் திறப்பு: சென்னை தியாகராயநகர் தலைமை தபால் அலுவலகத்தில் வெளிநாடுகளுக்கு புத்தகம், பார்சல், பதிவு தபால் ஆகியவற்றை பல்வேறு பொருள்களை அனுப்புவதற்காக சிறப்பு கவுன்ட்டர் சனிக்கிழமை (அக்.14) திறக்கப்பட்டது. இந்த கவுன்ட்டரை தமிழ்நாடு வட்டத் தலைமை தபால்துறை தலைவர் எம்.சம்பத் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியது: 
இரண்டாவது சிறப்பு கவுன்ட்டர்: சென்னை பரங்கிமலை தபால் அலுவலகத்தில் ஒரு சிறப்பு கவுன்ட்டர் செயல்படுகிறது. தற்போது, தியாகராய நகரில் இரண்டாவது கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சி: வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பொருள்களை அனுப்புவது தொடர்பாக எல்லா விவரங்களும் தபால் துறையின் பொது கவுன்ட்டர்களில் பணியில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கூறமுடியாது. சிறப்புக் கவுன்ட்டர் மூலம், எல்லாத் தகவல்களும் உடனுக்குடன் வழங்க முடியும். இந்த கவுன்ட்டரில் இரண்டு பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 35 கிலோ வரை...: கவுன்ட்டர் மூலம் வெளிநாடுகளுக்கு அதிகபட்சம் 35 கிலோ வரை அனுப்ப முடியும். வார விடுமுறை நாள்களிலும் இந்தச் சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் கூரியர் நிறுவனங்களை தபால் துறையில் கட்டணம் 50 சதவீதம் குறைவு.

    No comments:

    Post a Comment

    ரகசியம் காப்போம்!

    ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...