Sunday, October 15, 2017


தீபாவளிக்கு பர்ச்சஸா? பேஸ்புக், டுவிட்டரில் செல்ஃபி எடுத்து போட்டுடாதீங்க... இன்டைரக்ட்டா பார்க்குமாம் இன்கம்டேக்ஸ்...





தீபாவளிப் பண்டிகைக்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்யபவர்கள், அந்த பொருட்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், நீங்கள் செய்யும் செலவும், உங்கள் வருவாயும் சரியாக இருக்கிறதா?, வருவாய்க்கு ஏற்றார்போல் செலவு இருக்கிறதா?, அல்லது நீங்கள் செலவழிப்பது கருப்பு பணமா? வரி ஏய்ப்பு செய்ய செலவு செய்கிறீர்களா? என்பதை வருமானவரித்துறை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

ஆதலால், தீபாவளிக்கு ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள், கார், பைக் ஏதேனும் வங்கி அதை சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டால், அதுகுறித்து வருமானவரித்துறையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது இருக்கும்.

கருப்பு பணத்தையும், வரி ஏய்ப்பையும் கண்டுபிடிக்க ‘புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டத்தை வருமான வரித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணிக்கும் வருமானவரித்துறையினர் அதன் மூலம் தகவல்களைப் பெற்று கருப்பு பணம்பதுக்குவோர், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு ‘வலை விரிக்க’ உள்ளனர்.

இதற்காக கடந்த ஆண்டு ‘லார்சன் அன்ட் டூப்ரோ’ இன்போடெக் நிறுவனத்துடன் வருமானவரித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களின் உதவியுடன் இந்த மாதம் முதல் சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் தளங்களை வருமானவரித்துறை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது, ‘புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டம் இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்து ‘லார்சன் அன்ட் டூப்ரோ’ இன்போடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக மற்றும் மேலாண் இயக்குநர் சஞ்சய் ஜலோனா கூறுகையில், “ நாங்கள் ‘புராஜெக்ட் இன்சைட்’ எனும் திட்டத்துக்காக பிரத்தேயக தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் டுவிட்டர், பேஸ்புக்கில் கணக்கு வைத்து இருக்கும் ஒருவர், புதிதாக ஏதாவது, கார், விலை உயர்ந்த பொருட்களின் புகைப்படங்களை பதவிட்டால் உடனுக்குடன் எங்களுக்கு தெரிந்துவிடும். இந்த தளத்தில் குறிப்பிட்ட நபருக்காகவும் தனித்தனி பிரிவுகள் செயல்படுகின்றன’’ என்றார்.

கடந்த மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ வருமானவரித்துறையில் மனித உழைப்பை குறைத்து விட்டு, தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். புள்ளிவிவரங்களை தீவிரமாக ஆய்வு செய்து, வரி ஏய்ப்பு, கருப்புபணத்தை கண்டுபிடிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...