Tuesday, October 10, 2017

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்  'டெங்கு' காய்ச்சலுக்கு சிகிச்சை

சென்னை: ''முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.



சென்னை, புதுப்பேட்டையில் நடந்த, டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

தினமும், 2,000 ரூபாய்

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கூடுதலாக டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமிக்கப் பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், சிகிச்சை அளிக்கப்படும். தினமும், 2,000 ரூபாய் வரை சிகிச்சைக்காகபெற்று கொள்ளலாம். 

இந்த திட்டம், தமிழகம் முழுவதும் உள்ள, 870 மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதேபோல, பன்றிக்காய்ச்சல் மூலம், இறந்தவர்கள் குறித்த ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

டெங்கு பாதிப்பு உள்ளோருக்கு, நம்பிக்கை அளிக்கும் வகையில், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு, தேவையான மருத்துவ உபகரணங்களை, மருத்துவமனை நிர்வாகமே வாங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உணவகங்களிலும் நிலவேம்பு கஷாயம்

சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், உணவு வணிக சங்க நிர்வாகிகளுடன், ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில், 'அனைத்து உணவகங்களிலும், வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும். தேவையான நிலவேம்பு பாக்கெட்டுகள், மாவட்ட உணவு அதிகாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...