Monday, October 16, 2017

தீபாவளி அன்று ரிலீஸாகும் மூன்று படங்கள்!


By DIN  |   Published on : 15th October 2017 06:03 PM  
mmm

தமிழ் படங்களுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 10 சதவிகித கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டதால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்தனர். இந்திப் பிரச்னையால் தீபாவளி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டத் தொடர்ந்து, தீபாவளி படங்கள் சில திட்டமிட்டபடி வெளிவருவதை தடையில்லை எனும் நிலை வந்துள்ளது.
ஜே.பி.ஆர். சரத்குமார் நடித்துள்ள ‘சென்னையில் ஒருநாள் - 2’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், வைபவ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘மேயாத மான்’ தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது.    
ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்காமல் ஏற்கனவே அறிவித்தபடி அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் மெர்சலும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் முன்பதிவு தொடங்கி அதிவிரைவில் புக் ஆகிவருகிறது.
கேளிக்கை வரி பிரச்னை காரணமாக அக்டோபர் முதல் வாரம் ரிலீஸாகவிருந்த பத்துக்கும் மேற்பட்ட படங்கள், நவம்பர் 3-ம் தேதி வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...