Monday, October 9, 2017

Posted Date : 05:30 (08/10/2017)

60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள் கொள்ளை!
JAYAVEL B

சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள டெல் நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 160 லேப்டாப்களை ஏற்றிச் சென்ற லாரி கடத்தப்பட்டுள்ளது. இந்த விவரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




வெளிநாடுகளில் உள்ள டெல் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் லேப்டாப்களை விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து ஒரகடம் குடோனில் வைப்பது வழக்கம். அங்கிருந்து விற்பனை செய்வதற்காக மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சீனாவில் இருந்து விமானம் மூலம் 160 லேப்டாப்கள் வந்தன. அவற்றை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள குடோனிற்கு கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு சென்றனர். வண்டலூர், வாலாஜாபாத் சாலையில் லாரி சென்றுகொண்டிருக்கும்போது, படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இனோவா காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் லாரியை மடக்கி லாரி ஓட்டுனரையும், உதவியாளரையும் மிரட்டி இறக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி ஓட்டுனர் பாலசுப்பிரமணி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். லேப்டாப்புடன் கடத்தப்பட்ட அந்த லாரி காஞ்சிபுரம் அருகே நின்றுக்கொண்டிருப்பதாக மணிமங்கலம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது லேப்டாப் கொள்ளையடித்தது தெரியவந்தது. லேப்டாப் கடத்திய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024