மூன்றாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் உயரும் மதுபான விலை
Published : 11 Oct 2017 17:03 IST
சங்கீதா கந்தவேல்
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுகிது.
இதன்படி குவார்டர் பாட்டிலின் விலை ரூ.10 அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என அரசு அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். கடைசியாக கடந்த 2014 நவம்பரில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.
டாஸ்மாக் மதுபானங்கள் தரத்துக்கு ஏற்ப சாதாரணமானவை, நடுத்தரமானவை, ப்ரீமியம் தரம் கொண்டவை என மூவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. விலையேற்றத்துக்குப் பின்னர் சாதாரண ரக மதுபானம் ஒரு குவார்டர் (180 மி.லி.) ரூ.100-க்கு விற்கப்படும். தற்போது இது ரூ.88-க்கு விற்பனையாகிறது. நடுத்தர வகையிலான மதுபானம் ஒரு குவார்டர் பாட்டிலின் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.110-க்கு விற்கப்படும். ப்ரீமியம் தர மதுபானம் ரூ.120க்கு விற்கப்படுகிறது. இதன் விலை பிராண்டைப் பொறுத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.380 வரை விற்கப்படும் எனக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் மூலம், சராசரியாக வார நாட்களில் ரூ.70 கோடிக்கும் வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலும் மதுபானம் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2016 - 17 காலகட்டத்தில் மதுபான விற்பனை மூலமான வருவாய் ரூ.26,995 கோடி.
No comments:
Post a Comment