Friday, October 20, 2017

மெர்சல் சாதனை! வசூலில் நம்பர் 1 இடம் பிடித்தார் நடிகர் விஜய்!


By DIN  |   Published on : 19th October 2017 07:08 PM  
mersal

ஒரு ஹீரோவின் மார்கெட் வேல்யூ என்பது அவர்கள் குவிக்கும் வசூல் சாதனையில் உள்ளது.  ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என உலகத் திரைப்படத்துக்கான இலக்கணம் இதுதான்.
அதுவும் ஸ்டார் வேல்யூ அதிகமுள்ள நடிகர்களை பொறுத்த வரையில் FDFS (First day first show) முதல் நாள் முதல் காட்சி மிகவும் முக்கியம். அது படத்தைப் பற்றிய ரசிகர்களின் முதல் ரியாக்‌ஷனை வெளிப்படுத்திவிடும். மீடியா விமரிசனங்கள், ஸ்டார் ரேட்டிங் என படத்தைப் பற்றிய கருத்துக்கள் வெளி வரும். சமூக வலைத்தளங்களிலும் அந்தப் படத்தைப் பற்றிய பதிவுகள் வைரலாகும்.
கமர்ஷியல் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியம், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ் ஹீரோ படங்களுக்கு முதல் நாள் வசூல் லாபம் தருவதாக இருந்தால் தான் அவர் அந்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள முடியும், படத் தயாரிப்பாளரும் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியும்.
தீபாவளி அன்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளிவந்த மெர்சல் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலைப் பொருத்த வரையில் மெர்சல் தமிழ் நாட்டில் இதுவரை ரூ 22 கோடிக்கு மேல் முதல் நாளே வசூல் செய்துவிட்டது. இதற்கு முன் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருந்து வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலியின் முதல் நாள் வசூல் ரூ 21.5 கோடி. சமீபத்தில் வெளியான விவேகம் ரூ 17 கோடி முதல் நாள் வசூல் சாதனை செய்திருந்தது. இவற்றை தாண்டிய மெர்சல் 22 கோடியை வசூலித்து தமிழகத்தின் வசூலில் நம்பர் 1 படமாகிவிட்டது. தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் வசூல் சாதனையில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

    No comments:

    Post a Comment

    NEWS TODAY 21.12.2024