Tuesday, October 10, 2017

மதத்தை குறிக்கும் வார்த்தைகள் : பல்கலை பெயர்களில் வேண்டாம்!
பதிவு செய்த நாள்10அக்
2017
00:23

புதுடில்லி: பல்கலைக் கழகங்களின் பெயர்களில், 'ஹிந்து, முஸ்லிம்' போன்ற மதத்தை குறிக்கும் வார்த்தைகளை கைவிடும்படி, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்து உள்ளது.

நாட்டின், மத்திய பல்கலைகளில், முறைகேடுகள் நடப்பதாக, புகார் எழுந்ததை அடுத்து, ஆய்வு செய்து பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, யு.ஜி.சி., உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகள் விபரம்: மத்திய அரசு நிதியில் செயல்படும் பல்கலைகள், மதச்சார்பற்ற கல்வி மையங்களாக செயல்பட வேண்டும். அவற்றின் பெயர்களில், 'ஹிந்து, முஸ்லிம்' போன்ற, மதத்தை குறிக்கும் வார்த்தைகள் இடம் பெறக் கூடாது.

அலிகார் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் ஹிந்து பல்கலை போன்றவற்றில் உள்ள, முஸ்லிம், ஹிந்து போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், ''பல்கலைகளின் பெயரை மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...