Tuesday, October 10, 2017

போலீஸ் எஸ்.ஐ.,யாக திருநங்கை பொறுப்பேற்பு
பதிவு செய்த நாள்09அக்
2017
23:36




போலீஸ் எஸ்.ஐ.,யாக தேர்ச்சி பெற்ற திருநங்கை, பிரித்திகா யாசினி, சென்னையில் பொறுப்பேற்றார்.

தமிழக காவல் துறையில், காலியாக இருந்த, எஸ்.ஐ., பணியிடங்கள், 1,078ஐ நிரப்புவதற்கான தேர்வை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2015ல் நடத்தியது. இதற்கு விண்ணப்பித்திருந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த, திருநங்கை பிரித்திகா யாசினி நிராகரிக்கப்பட்டார். பின், சட்டப் போராட்டம் நடத்தி, எஸ்.ஐ.,யாக தேர்ச்சி பெற்றார். நாட்டில் முதல் திருநங்கை, எஸ்.ஐ., என்ற பெருமையும் பெற்றார்.

ஆறு மாதங்களுக்கு முன், தர்மபுரி மாவட்டத்தில், பயிற்சி, எஸ்.ஐ.,யாக பணி அமர்த்தப்பட்ட, திருநங்கை பிரித்திகா யாசினி, சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு பிரிவு, எஸ்.ஐ.,யாக நியமிக்கப்பட்டார்; அவர் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரித்திகா யாசினி கூறியதாவது: மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த இந்த வாய்ப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நான், இந்த பணியில் சேர காரணமாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக சென்னையில் பணி இடம் ஒதுக்கிய, கமிஷனருக்கு நன்றி.ஆண், பெண், திருநங்கை என்ற பாகுபாடு இன்றி, யார் குற்றம் செய்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பேன். சென்னை சூளைமேடு பகுதியில், திருநங்கையர் அதிகம். அதனால், இங்கு என்னை பணி அமர்த்தி உள்ளனர் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...