சென்னை - பாரீஸ் விமான சேவை
பதிவு செய்த நாள்11அக்
2017
23:41
சென்னை: சென்னை - பாரீஸ் நகருக்கு, அக்., 29 முதல், நேரடி விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து, இந்தியாவுக்கான, பிரெஞ்ச் துாதர், கூறியதாவது:
இந்தியாவில் இருந்து, 2014ல், 3.60 லட்சம் பேர், பிரான்ஸ் நாட்டுக்கு வந்தனர். அது, 2016ல், 6.88 லட்சமாக உயர்ந்தது. சென்னையில் இருந்து, பிரான்ஸ் தலைநகர், பாரீசுக்கு, இடையில் எங்கும் நிற்காத, விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம். 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் இந்த விமான சேவை, அக்., 29 முதல், வாரம் ஐந்து முறை இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment