Thursday, October 12, 2017


திருமலையில் லஞ்சம் :90 பேர் பணிநீக்கம்
பதிவு செய்த நாள்11அக்
2017
23:07


திருப்பதி: திருமலையில் லஞ்சம் பெற்ற, 90 நாவிதர்களை, தேவஸ்தானம் பணிநீக்கம் செய்துள்ளது.

திருப்பதி, ஏழுமலையானுக்கு பக்தர்கள் இலவசமாக முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

இங்கு, 1,200 நாவிதர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம், ஊதியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாவிதர்கள் பணம் கேட்டு வற்புறுத்துவதாக, பக்தர்கள் பலர் தேவஸ்தானத்திடம் புகார் அளித்தனர்.

அதனால், கல்யாணகட்டாக்களில் நாவிதர்கள் பணம் கேட்டு வற்புறுத்தினால், கண்காணிப்பு கேமரா முன் வந்து, புகார் அளிக்கும்படியும், தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியது.கடந்த மூன்று மாதங்களாக தேவஸ்தான அதிகாரிகள், கல்யாணகட்டாக்களில் பணிபுரியும் நாவிதர்களை ரகசியமாக கண்காணித்தனர். அதில், தொடர்ந்து பக்தர்களிடம் பணம் லஞ்சமாக பெறும், 90 நாவிதர்களை கண்டறிந்து, அவர்களை நேற்று, பணிநீக்கம் செய்து உத்திரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நாவிதர்கள், தேவஸ்தான செயல் அதிகாரி, சீனிவாசராஜூவிடம், 'இனி லஞ்சம் பெறமாட்டோம்' என வாக்குறுதி அளித்து, பணிநீக்க உத்தரவை ரத்து செய்யும்படி வேண்டினர். ஆனால், அவர் அதுகுறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.07.2026