Friday, October 13, 2017

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு
தீபாவளியன்று வங்க கடலில் புதிய புயல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 18ல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளி நாளில் வங்க கடலில் 'கியாண்ட்' என்ற புயல் உருவாகி தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க 
மாநிலங்களை மிரட்டியது. அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி அன்று வங்க கடலில் புதிய புயல் உருவாவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளன. அரபி கடலில் இருந்து, கிழக்கு நோக்கி 
நகரும் மேக கூட்டங்கள், வங்க கடலில் வேகமாக நுழைந்து வருகின்றன. இந்த மேக கூட்டங்கள் ஒன்று கூடுவதால் அக்., 15௫ல் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட தகவலில் 'இன்னும் நான்கு நாட்களில் கிழக்கு மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என 
கூறப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலக அறிவிப்பில் 'வங்க கடலில் அக்., 15ல் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய அதிக வாய்ப்புகள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.எனவே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் 
அக்., 18ல் தீபாவளி நாளில் புயலாகவும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அது 
புயலாக மாறுமா என்பது 16ம் தேதி தான் உறுதிப்படுத்தப்படும்.புயலாக மாறினால் அது ஒடிசா அல்லது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 
புயலாக மாறாவிட்டால் 18ம் தேதிக்கு பின் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...