Friday, October 13, 2017

ஆம்பூர் பிரியாணி சாப்பிட்ட சசிகலா

ஆம்பூர்: பரோல் முடிந்து பெங்களூரு சிறைக்கு சசிகலா காரில் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

அவரின் கணவர் நடராஜனுக்கு உடல் நிலை சரியில்லாததால் ஐந்து நாள் பரோலில் வெளியில் வந்தார். நேற்று பரோல் முடிந்ததால் நேற்று காலை சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு வேலுார் வழியாக காரில் சென்றார்.வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை டோல்கேட்டுக்கு காலை 11:30 மணிக்கு வந்த சசிகலாவை ஆதரவாளர்கள் வரவேற்றனர். 

ஆம்பூரில் இருந்து மின்னுார் வரை இரண்டு கி.மீக்கு நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் ஆதரவாளர்கள் நின்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே உள்ள குத்துாஸ் கடையில் சசிகலா டீ சாப்பிட்டார். ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.12.2025