தனியார் மருத்துவ மாணவர்கள் பிரச்னை : சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் பெற அறிவுரை
2017
23:59
அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மாற்ற கோரிய மனுவை, நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார்.
மருத்துவ கல்லுாரியில், வழக்கறிஞர்கள் எனக்கூறி, கறுப்பு, வெள்ளை உடையுடன் சிலர் இருப்பதாக, புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அறிக்கை அளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட போலீசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று, விசாரணைக்கு வந்த போது, காஞ்சிபுரம், எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்தார். நீதிபதி கிருபாகரன்
காஞ்சிபுரம், எஸ்.பி., அறிக்கையை பார்க்கும் போது, கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளையின் பழைய, புதியஅறங்காவலர்கள் தரப்புக்கு, நீதித்துறை மற்றும் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது.அதனால் தான், கறுப்பு, வெள்ளை உடை அணிந்த, வழக்கறிஞர்கள் எனக்கூறி கொள்பவர்களை, இரு தரப்பினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை விளக்குவதற்காக, இரு தரப்பிலும் சில வழக்கறிஞர்கள் சென்றதாக கூறப்பட்டுள்ளது.அந்த வழக்கறிஞர்களை தவிர, புகைப்படத்தில் இருக்கும் மற்றவர்களை தான், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குறை கூற வேண்டும்.
எந்தெந்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர் என்பது குறித்து, இரு தரப்பும், மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அனைத்து அறங்காவலர்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட வழக்கறிஞர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு எதிராகவும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களை, படிப்பில் தொடர அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், 'மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கிய அத்தியாவசிய சான்றிதழை, அரசு ரத்து செய்து விட்டது.
'அது பற்றி, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வராமல், பழைய அறங்காவலர்கள் உத்தரவு பெற்றுள்ளனர்' என்றார்.
ஆனால், சான்றிதழை ரத்து செய்த விபரம், தங்களுக்கு தெரியாது என, அறங்காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர், வி.பி.ராமன், மத்திய அரசு வழக்கறிஞர், ரபு மனோகர், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெறுவதாக தெரிவித்தனர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சிராஜுதீனும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். எனவே, உச்ச நீதிமன்றத்தில், இவர்கள் முறையிடலாம்.
தற்போது, அன்னை மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாகம், பழைய அறங்காவலர்கள் வசம் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்கின் முடிவை பொறுத்து, இது அமையும். விசாரணை, வரும், ௨௪ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பதிவு செய்த நாள்
13அக்2017
23:59
சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்ற கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள, அன்னை மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு முடித்த, ௧௪௦க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாததால், புதிதாக மாணவர்களை சேர்க்க, மருத்துவ கவுன்சில், இந்த கல்லுாரிக்கு தடை விதித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள, அன்னை மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு முடித்த, ௧௪௦க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களை அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளாததால், புதிதாக மாணவர்களை சேர்க்க, மருத்துவ கவுன்சில், இந்த கல்லுாரிக்கு தடை விதித்தது.
அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மாற்ற கோரிய மனுவை, நீதிபதி, கிருபாகரன் விசாரித்தார்.
மருத்துவ கல்லுாரியில், வழக்கறிஞர்கள் எனக்கூறி, கறுப்பு, வெள்ளை உடையுடன் சிலர் இருப்பதாக, புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அறிக்கை அளிக்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட போலீசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று, விசாரணைக்கு வந்த போது, காஞ்சிபுரம், எஸ்.பி., அறிக்கை தாக்கல் செய்தார். நீதிபதி கிருபாகரன்
பிறப்பித்த உத்தரவு:
காஞ்சிபுரம், எஸ்.பி., அறிக்கையை பார்க்கும் போது, கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளையின் பழைய, புதியஅறங்காவலர்கள் தரப்புக்கு, நீதித்துறை மற்றும் போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது.அதனால் தான், கறுப்பு, வெள்ளை உடை அணிந்த, வழக்கறிஞர்கள் எனக்கூறி கொள்பவர்களை, இரு தரப்பினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை விளக்குவதற்காக, இரு தரப்பிலும் சில வழக்கறிஞர்கள் சென்றதாக கூறப்பட்டுள்ளது.அந்த வழக்கறிஞர்களை தவிர, புகைப்படத்தில் இருக்கும் மற்றவர்களை தான், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குறை கூற வேண்டும்.
எந்தெந்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர் என்பது குறித்து, இரு தரப்பும், மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அனைத்து அறங்காவலர்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட வழக்கறிஞர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு எதிராகவும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களை, படிப்பில் தொடர அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், 'மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கிய அத்தியாவசிய சான்றிதழை, அரசு ரத்து செய்து விட்டது.
'அது பற்றி, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வராமல், பழைய அறங்காவலர்கள் உத்தரவு பெற்றுள்ளனர்' என்றார்.
ஆனால், சான்றிதழை ரத்து செய்த விபரம், தங்களுக்கு தெரியாது என, அறங்காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில், மருத்துவ கவுன்சில் வழக்கறிஞர், வி.பி.ராமன், மத்திய அரசு வழக்கறிஞர், ரபு மனோகர், உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெறுவதாக தெரிவித்தனர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சிராஜுதீனும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். எனவே, உச்ச நீதிமன்றத்தில், இவர்கள் முறையிடலாம்.
தற்போது, அன்னை மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாகம், பழைய அறங்காவலர்கள் வசம் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்கின் முடிவை பொறுத்து, இது அமையும். விசாரணை, வரும், ௨௪ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment