Saturday, October 14, 2017

'
கேம்பஸ் இன்டர்வியூ' வழக்கு: ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: குறிப்பிட்ட பொறியியல் கல்லுாரிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து, வளாக நேர்காணலை, பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துவது பற்றி, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மாணவியின் தந்தை, தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், ௫௩௨ பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இருந்தும், குறிப்பிட்ட பொறியியல் கல்லுாரிகளை தேர்வு செய்து, அங்குள்ள மாணவர்களுக்கு மட்டுமே, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலை, பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகின்றன. வளாக நேர்காணல் குறித்து, எந்த வழிமுறையும் இல்லை.
குறிப்பிட்ட, ௩௦ கல்லுாரிகளில், வளாக நேர்காணலை நடத்தி, பெயர் அளவுக்கு மற்ற கல்லுாரிகளில், குறைந்த அளவு மாணவர்களுக்கு நடத்துகின்றனர். 
எனவே, பொறியியல் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, மாநில அளவில், பொதுவான முறையில், வளாக நேர்காணல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, சுயநிதி தொழில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் கூட்டமைப்பு, இந்திய கல்வி வளர்ச்சி சங்கம் ஆகியவை சேர்க்கப் படுகின்றன.
ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், மத்திய அரசு வழக்கறிஞர், ரபு மனோகர், 'நோட்டீஸ்' பெற்றுக் கொண்டார். அக்., ௨௦க்குள் பதிலளிக்க வேண்டும்.
மனுதாரரின் குற்றச்சாட்டுகள் கடுமையானவை; பொறியியல் கல்லுாரி மாணவர்களின் நலன்களை பாதிப்பதாக உள்ளது.
சில தனியார் கல்லுாரிகள் மற்றும் நிறுவனங்கள், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, புறக்கணித்து விட முடியாது. வளாக நேர்காணலுக்கான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதனால், தனியார் நிறுவனங்கள், கீழ்கண்ட விபரங்களை அளிக்க வேண்டும்.
 தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ௨௦௧௦ - ௨௦௧௭ வரை, எத்தனை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன?
 தனியார் நிறுவனங்கள், வளாக நேர்காணலுக்காக தேர்ந்தெடுத்த கல்லுாரிகளின் பெயர் என்ன?
 வளாக நேர்காணலுக்கு கல்லுாரிகளை தேர்ந்தெடுக்கும் போது, தனியார் நிறுவனங்கள் பின்பற்றும் அளவுகோல் என்ன?
 எத்தனை மாணவர்கள், வளாக நேர்காணலில், ௨௦௧௦ - ௨௦௧௭ வரை தேர்ந்தெடுக்கப்பட்டனர்; அந்த மாணவர்களின் பட்டியலை, ஆண்டு, கல்லுாரி, நிறுவனங்கள் வாரியாக அளிக்க வேண்டும்
 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், எத்தனை பேருக்கு, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன; ஆண்டு, கல்லுாரி, நிறுவனங்கள் வாரியாக அளிக்க வேண்டும்
 சில கல்லுாரிகளை மட்டும் தேர்ந்தெடுப்பது, அந்த கல்லுாரிகளின் புகழை உயர்த்தவும், கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்காகவும் தான் என்பது உண்மையா?
 பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் மீதான, இத்தகைய குற்றச்சாட்டுகள்குறித்து, அண்ணாபல்கலைக்கு தெரியுமா?
விசாரணை, ௨௩க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...