Saturday, October 14, 2017

வரதட்சணை வழக்கில் கைதுக்கு கட்டுப்பாடு: மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு

வரதட்சணை வழக்குகளில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தாரை உடனடியாக கைது செய்யக் கூடாது என, கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது. வரதட்சணை தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை உடனடியாக கைது செய்யக் கூடாது' என, ஜூலையில் தீர்ப்பு அளித்தது. இந்த புகார்கள் மீதான விசாரணைக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.இதை எதிர்த்து, 'நியாயதார்' என, மகளிர் நலனுக்கான அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

அதன் விபரம்: வரதட்சணை கொடுமையில் இருந்து பெண்களை காப்பாற்றவே, குற்றவியல் நடைமுறை சட்டத்தில், 498ஏ பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, வரதட்சணை புகாரில், கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை கைது செய்து விசாரிக்க முடியும்.

வேறு எந்த வழியும், வாய்ப்பும் இல்லாமல், கடைசியாகத்தான் இந்த சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால், இந்த சட்டப் பிரிவு நீர்த்து போய்விடுகிறது.

சட்டத்தின் மீதான மக்களுக்கு இருந்த பயம் போய்விட்டது. இது, பெண்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அதனால், வரதட்சணை புகார் தொடர்பான தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை விசாரணைக்கு ஏற்ற, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'வரதட்சணை புகார் தொடர்பான முந்தைய தீர்ப்பை, நாங்கள் ஏற்கவில்லை. அது, பெண்களுக்கான உரிமையை கட்டுப்படுத்துவதாக உள்ளது. அதனால், முந்தைய தீர்ப்பை மாற்றி அமைப்பது குறித்து விசாரிக்கப்படும்' என, கூறியுள்ளது.
இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ள அமர்வு, வழக்கின் விசாரணையை, அக்., 30க்கு ஒத்தி வைத்தது.

No comments:

Post a Comment

From first breath: Male and female brains really do differ at birth

From first breath: Male and female brains really do differ at birth By StudyFinds Staff Reviewed by Steve Fink Research led by Yumnah Khan, ...