Saturday, October 14, 2017


சித்த மருத்துவ பிரிவில் இல்லை மருந்துகள் : காலி டப்பாக்களை காட்டும் டாக்டர்கள்


விருதுநகர்: அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் சித்த மருத்துவ பிரிவில், நிலவேம்பு கஷாயத்தை தவிர மற்ற மருந்துகள் இல்லாமல் காலி டப்பாக்களுடன் செயல்படுகிறது. 
டெங்கு இறப்பை குறைக்க உதவும் சித்தா பிரிவை, அரசு கண்டுகொள்ளாததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மாவட்டம்தோறும் தலைநகர் மற்றும் தாலுகா அளவில் அரசு மருத்துவமனைகள்,கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு சித்தா பிரிவும் உள்ளது. 
தேசிய ஊரக நலவாழ்வு திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 475 சித்த மருத்துவ மையங்களும் திறக்கப்பட்டன. இதில் டாக்டர்கள், ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இந்த பிரிவிற்கு மருந்து வாங்க மத்திய அரசு மூன்று மாதம் ஒரு முறை தலா, 75,000 ரூபாய் ஒதுக்குகிறது.
ஏமாற்றமே மிச்சம்

ஆனால் மாநில அரசின் கீழ் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் டாக்டர் பற்றாக்குறை உள்ளது. மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு, மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதிலிருந்து, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தலா, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 

தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு பிரச்னை உள்ளதால், இந்த ரூபாயில் பெரும்பாலும், நிலவேம்பு கஷாயம் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

இதனால் நோய்களுக்கான மருந்துகள் இல்லாமல் வெளியில் விலைக்கு வாங்கும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். 
மருந்துகள் வைக்கப்படும் டப்பாக்கள் அனைத்தும், காலியாக உள்ளதால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
டெங்கு காய்ச்சல் பாதிப்பால், சித்த மருத்துவ பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்கிறது. 

மருந்துகளின் தேவை அதிகரிக்கிறது. அதற்கான நிதி ஒதுக்காததால் மருந்துகள் இல்லாமல் பலர் வேதனைப்படும் நிலை உள்ளது.

ஒதுக்கப்பட்ட குறைந்த நிதியில் நிலவேம்பு கஷாயம் வாங்க மட்டும் போதுமானதாக உள்ளது. 
குறைந்தபட்சம் ஒவ்வொரு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய சித்த வைத்திய பிரிவுகளுக்கு மாதம் தலா,75 ஆயிரம் ரூபாய்ஒதுக்கினாலே, நோயாளிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...