Saturday, October 14, 2017

செஞ்சி வாரச் சந்தையில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செஞ்சி: செஞ்சியில் நேற்று நடந்த வாரச் சந்தையில், 12 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிகிழமையில் நடக்கும் வாரச்சந்தை, பிரசித்தி பெற்றது. இந்த சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்தாண்டு, புரட்டாசி மாதம் முடிவடையும், மறுநாள், வரும்,18ல் தீபாவளி பண்டிகை வியாபாரிகள் வந்திருந்தனர். இலவச ஆடு வழங்கும் திட்டத்திற்காக, ஆடு கொள்முதல் செய்ய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து, கால்நடை துறையினரும் அதிக அளவில் வந்திருந்தனர். கால்நடை வளர்ப்போர், சிறு வியாபாரிகள் என, 5,000க்கும் அதிகமானோர், 30 ஆயிரத்திற்கும் அதிமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகாலை, 5:00 மணிக்கு சந்தை துவங்கியதும், வர்டிகை கொண்டாடப் பட உள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிப்பவர்கள் அசைவம் தவிர்த்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை அன்று, இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், நேற்று செஞ்சி வாரச் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. 

சேலம், தர்மபுரி, ஈரோடு, பெங்களூரு, சென்னை, திருச்சி, புதுச்சேரி என பல்வேறு ஊர்களில் இருத்தகம் சூடு பிடித்தது. நேரம் செல்ல, செல்ல ஆடுகளின் விலை கிடு, கிடு என உயர்ந்தது. 

இதில், 10 - 12 கிலோ இறைச்சி உள்ள ஆடு, 4,500 - 5,500 வரையிலும், 5 - 7 கிலோ இறைச்சி உள்ள ஆடு, 2,500 முதல் 3,000 ரூபாய் வரை விலை போனது. காலை, 10:00 மணிக்குள்ளாகவே பெரும்பாலான ஆடுகள் விற்பனையாகின. மொத்தம், 30 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகி, 12 கோடி ரூபாய் அளவிற்கு நேற்று வர்த்தகம் நடந்தது. 

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...