Saturday, October 14, 2017


காளையார்கோவில் தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

காளையார்கோவில்: காளையார்கோவில் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

மதுரை--தொண்டி தேசிய நெடுஞ்சாலையில்உள்ள காளையார்கோவில் தாலுகா மருத்துவமனைக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள்.மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்--சாயல்குடி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குபவர்களும் முதலுதவிக்கு வந்து செல்கிறார்கள். கடந்த 2016ல் அக் 1ம் தேதியிலிருந்து தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல்பட்டு வருகிறது. 

9 டாக்டர்கள் நியமிக்க வேண்டும், ஒருவர் மட்டும் பணிபுரிந்து வருகிறார். அவரே அலுவலக பணியையும் சேர்த்து பார்த்து வருகிறார். நகர் முழுவதும் வைரஸ் காய்ச்சல் தாக்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.நோயாளிகள் காலை 7:00 மணியிலிருந்து 9:00 மணி வரை காத்திருக்கின்றனர்.

டாக்டர் காலை 9:30 மணிக்கு வந்து மதியம் 1:00 மணிக்கு சென்று விடுகிறார். 
பின்னால் வரிசையில் காத்திருப்பவர்களை அவசரப்படுத்தி சிகிச்சைக்கு வருபவர்களை உடனடியாக வெளியேற்றி விடுகின்றனர். வரிசையில் நிற்கும் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

நோயாளிகளின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை.பெரும்பாலும் ஊசி போடுவதில்லை. மாத்திரைகள் மட்டுமே வழங்கி வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ-,மாணவிகள் சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்து கிடக்கிறார்கள். குறித்தநேரத்தில் பள்ளி செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இரவில் நர்சுகள் மருத்துவமனையை பூட்டிவிடுவதால், சாலைவிபத்து, விஷக்கடிக்கு அவசரமாக சிகிச்சைக்கு வருபவர்கள் திரும்பி சென்றுவிடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய லேப் டெக்னீசியன் கிடையாது,அதற்கான உபகரணங்களும் கிடையாது. 

தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...