Thursday, October 12, 2017

1,428 கிராமங்களில், '3ஜி' : பி.எஸ்.என்.எல்., மும்முரம்

பதிவு செய்த நாள்11அக்
2017
20:56

தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், தமிழகத்தில், 1,428 கிராமங்களில், '3ஜி' தொழில்நுட்பத்தில், 'மொபைல் போன் சிக்னல்' வழங்குவதற்கான பணிகளை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர்த்த மாவட்டங்கள், 'பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு' தொலைத்தொடர்பு வட்டத்தின் கீழ் வருகின்றன.
அங்கு, பல இடங்களில், மொபைல் போன் கோபுரங்கள், பழைய தொழில்நுட்பத்திலும், பழைய கருவிகள் மூலமாகவும், இயக்கப்படுகின்றன. அவற்றை மாற்றும் பணிகளில், பி.எஸ்.என்.எல்., தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டத்தின், முதன்மை தலைமை பொது மேலாளர், சந்தோஷம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு வட்டத்தில், 5,500 மொபைல் போன் கோபுரங்கள் உள்ளன. அவற்றில், 3,000 கோபுரங்கள், '2ஜி, 3ஜி' ஆகிய, இரு தொழில்நுட்பத்திலும் இயங்குபவை. மீதம் உள்ள, 2,500 கோபுரங்கள், '2ஜி' தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அந்த கோபுரத்தை இயக்கும் கருவிகளில், பழையவற்றை படிப்படியாக மாற்றி அமைத்து வருகிறோம். அதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு தெளிவான, 'சிக்னல்' கிடைக்கும். அதன் தொடர்ச்சியாக, '3ஜி' தொழில்நுட்பம் இல்லாத, 1,428 கிராமங்களில், அந்த சேவையை வழங்க, புதிய கருவிகளை நிறுவி வருகிறோம். அதனால், அப்பகுதிகளில் மொபைல் போன் சிக்னல்கள் வலுப்பெறும். இதுதவிர, 1,127 கோபுரங் களில் பழைய, '2ஜி' தொழில்நுட்ப கருவிகளை மாற்றி, புதிய கருவிகளை பொருத்தி வருகிறோம். இதுவும், பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் -

No comments:

Post a Comment

77 teachers found with fake degrees Evidence Found Three Years Ago, Yet No Action Taken

77 teachers found with fake degrees Evidence Found Three Years Ago, Yet No Action Taken  TIMES NEWS NETWORK  BHOPAL EDITION 28.12.2024 Indor...