வக்பு போர்டு உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து வழக்கு
பதிவு செய்த நாள்11அக்
2017
23:21
சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ரபி பெய்க் என்பவர் தாக்கல் செய்த மனு:
வக்பு வாரிய உறுப்பினராக, தமிழ்மகன் உசேன் என்பவரை, தமிழக அரசு நியமித்துள்ளது.
அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர், வணிக மேலாண்மை, சமூக பணி, நிதி, வருவாய், விவசாயம் என, ஏதாவது ஒரு துறையில், தொழில் ரீதியான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், எந்த துறையில் அனுபவம் பெற்றிருக்கிறார் என கூறப்படவில்லை. பொது மக்களிடம் இருந்து, விண்ணப்பங்களை வரவழைக்காமல், தன்னிச்சையாக நியமனம் நடந்துள்ளது.
வக்பு வாரிய தலைவராக, தமிழ்மகன் உசேன் இருந்தபோது, வாரியத்தின் நலன்களுக்கு பாதகமாக, பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பல உத்தரவுகளுக்கு, தடையும் விதிக்கப்பட்டது.
இவருக்கு எதிராக, இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலர், பரிசீலிக்க தவறி விட்டார்.
எனவே, வக்பு வாரிய உறுப்பினராக, தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதற்கு, தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் ஆஜரானார். மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, பிற்படுத்தப்பட்ட துறை செயலர், வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment